ஒரு ஈமெயில் கணக்கை உருவாக்குவதை விட சுலபமானது ஒரு paypal கணக்கை உருவாக்குவது.
*paypal.com சென்று signup கிளிக் செய்யவும்.
*personal , premium , business என்று மூன்று கணக்குகளை காட்டும். அதில் personal-ய் தேர்ந்தெடுக்கவும்
*பின் உங்களுடைய பெயர், முகவரி ஆகியவற்றை சரியாக கொடுக்க வேண்டும்.
*credit card number for verification என்று கேட்பார்கள். அதை தவிர்த்து மற்ற விபரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட்டால் உங்கள் கணக்கு தயார்.

*உங்கள் கணக்கை verify செய்வது மிக முக்கியமானது. உங்கள் கணக்கை துவங்கியபின் முதல் பணப் பரிவர்த்தனையின் கூட உங்கள் கணக்கை verify செய்து கொள்ளலாம்.
*credit card இல்லாதவர்கள் அல்லது credit card விபரங்களை கொடுக்க விருப்பமில்லாதவர்கள் visa அல்லது mastercard சேவையை தரும் debit card-ய் பயன்படுத்தலாம்.
*அல்லது payoneer மற்றும் entropay போன்ற ஆன்லைன் வர்த்தகத்தில் வழங்கப்படும் இலவச atm கார்டுகளையும் பயன்படுத்தலாம்.
*paypal கணக்கை verify செய்யும் பொழுது உங்களது கார்டில் குறைந்தபட்சம் $2 இருக்க வேண்டும்.
*நீங்கள் verify செய்யும் பொழுது உங்கள் கார்டிலிருந்து $1.95 எடுத்து கொள்ளப்படும். அந்த பரிவர்தனைகான statement-ல் paypal என்ற பெயருடன் நான்கு இலக்க ரகசிய எண் இருக்கும் அதை paypal கணக்கில் சரியாக பொருத்துவதன் மூலம் உங்கள் கணக்கை verify செய்யலாம்.
*நீங்கள் கணக்கை ஆரம்பிக்கும் பொது first name and last name சரியாகக் கொடுப்பது அவசியம். தவறான பெயரை கொடுத்த பின் அதை மாற்றுவதற்கு பல விதமான ஆவணகளை நீங்கள் அளிக்க வேண்டியது வரும். அதனால் முன் கூட்டியே சரியான பெயரை கொடுக்கவும். middle name உங்கள் ஆவணங்களில் இருந்தால் கொடுக்கலாம் இல்லையெனில் அதை தவித்து விடுங்கள்.
No comments:
Post a Comment